அஞ்சல் மூல வாக்களிப்பு! வாக்காளர் பட்டியலை அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கை

Election Commission of Sri Lanka Election
By Mayuri Oct 16, 2024 07:14 AM GMT

பொதுத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்காளர் பட்டியலை அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கை இன்று இடம்பெறவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதேநேரம் அஞ்சல் மூல வாக்குச்சீட்டுகள் எதிர்வரும் 23ஆம் திகதி விநியோகிக்கப்படவுள்ளன.

அஞ்சல் மூல வாக்களிப்பு

இதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதியும், நவம்பர் மாதம் முதலாம் மற்றும் 4ஆம் திகதிகளிலும் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் 8ஆம் திகதிகளில் வாக்களிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அஞ்சல் மூல வாக்களிப்பு! வாக்காளர் பட்டியலை அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கை | Parliament Election In Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW