பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்பு குறித்து வெளியான தகவல்

Sri Lanka Police Election Commission of Sri Lanka Election
By Mayuri Oct 04, 2024 02:19 AM GMT
Mayuri

Mayuri

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை 22 மாவட்டச் செயலாளர் அலுவலகங்களில் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் எதிர்வரும் 11ஆம் திகதி மதியம் 12 மணிவரை கட்டுப்பணத்தைச் செலுத்த முடியும். எனினும் இறுதி தருணத்தில் கட்டுப்பணம் செலுத்துவதைத் தவிர்க்குமாறு வேட்பாளர்களிடம் கோரிக்கை விடுக்கிறோம் என சுட்டிக்காட்டியுள்ளார். 

இறுதி தருணத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காலப்பகுதியில் சிக்கல் ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்பு குறித்து வெளியான தகவல் | Parliament Election In Sri Lanka

விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

இதேவேளை, வேட்பு மனு கையளிப்பு காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையளிப்பு காலப்பகுதியில் பேரணி மற்றும் ஊர்வலம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW