கல்விச் செலவிற்காக 6 ஆயிரம் ரூபா! அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
பெண் தலைமைத்துவமுள்ள குடும்பங்களுக்கு வறுமை மற்றும் அவமானங்கள் மாத்திரமே பரிசாக வழங்கப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க தெரிவித்துள்ளார்.
நடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டில் உள்ள குறைந்த வருமானம்பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்விச்செலவிற்கு தற்போதைய அரசாங்கத்தினால் பொருளாதார ரீதியில் நிவாரணம் வழங்கப்படும்.
இதன்படி, பெண் தலைமைத்துவமுள்ள குடும்பங்களில் உள்ள பிள்ளைகளின் கல்விச் செலவிற்காக 6000ரூபா நிவாரணம் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மக்கள் பங்கு பற்றும் பொருளாதாரம்
ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க தனது கொள்கை பிரகடன உரையில் இது தொடர்பாக தெரிவித்திருந்தார்.
இதற்கான மக்களின் பங்கு கடந்த கால அரசாங்கத்தில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட வரிகள் மக்களுக்காக பயன்படுத்தப்படவில்லை. உற்பத்தியிலும் தான் அதனால் கிடைத்த நன்மைகளுக்கும் மக்கள் உள்வாங்கப்படவில்லை.
இதற்கெல்லாம் மாறாக மக்களை அனைத்திலும் பங்குபற்ற செய்கின்ற மற்றும் நன்மையடையச்செய்கின்ற செயற்றிட்டத்தினையே நாங்கள் தற்போது முன்னெடுக்கவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |