குழந்தைகளுக்கு பாராசிட்டமால் கொடுக்கும் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Sri Lanka
By Mayuri Aug 29, 2024 10:19 AM GMT
Mayuri

Mayuri

அறியாமல் குழந்தைகளுக்கு பாராசிட்டமால் அதிக அளவு கொடுப்பதன் காரணமாக குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் குழந்தைகளின் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தேசிய நச்சு தகவல் மையத் தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்தன எச்சரித்துள்ளார். 

சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தில் நேற்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், வைத்தியரின் பரிந்துரைகளில் பாராசிட்டமால் மருந்தை கொடுக்க வேண்டும்.

மேசமான நிலைக்குள்ளாகும் வாய்ப்பு

எனவே குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் போது அதிக அளவு பாராசிட்டமால் கொடுக்கப்படுவதால் குழந்தைகளின் நிலை மேலும் மேசமான நிலைக்குள்ளாகும் வாய்ப்புள்ளது.

குழந்தைகளுக்கு பாராசிட்டமால் கொடுக்கும் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Paracetamol For Children With Medical Prescription

சில பெற்றோர்கள் காய்ச்சலை கண்டறிந்தால் பாராசிட்டமாலை அதிக அளவில் கொடுக்கின்றனர். இவர்களுக்கு மருத்துவ ஆலோசனைப்படி திட்டமிடப்பட்ட அளவை வழங்கவும் அறிவுறுத்துகிறோம்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் பாராசிட்டமால் மருந்து கொடுக்க வேண்டுமா என்று மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW