மதில் உடைந்து வீழ்ந்ததில் நகர சபை பணியாளர் ஒருவர் மரணம்
பாணந்துறை நகர சபைக்குச் சொந்தமான மதில் ஒன்று உடைந்து வீழ்ந்தில் நகர சபையின் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (13.07.2023) இடம்பெற்றுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய அஜித் குமார டி சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது குறித்து பொலிஸார் மேலும் குறிப்பிடுகையில்,
“பாணந்துறை தொடருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள நகர சபைக்குச் சொந்தமான குப்பை கொட்டும் இடத்தின் மதில் சுவருக்கு அருகில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
குறித்த சம்பவத்தின் போது அருகில் இருந்தவர்கள் உடனடியாக இடிபாடுகளை அகற்றி அவரை மீட்டு பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.” என தெரிவித்துள்ளனர்.