ஒரு மாதத்தின் பின்பே பால்மா விலைகள் குறைப்பு : இறக்குமதியாளர் சங்கம்
Sri Lanka
Milk Powder Price in Sri Lanka
By Nafeel
அடுத்த மாதத்திற்குள் பால் மாவின் விலையை மேலும் குறைப்பது தொடர்பில் பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் பால் மா இறக்குமதியாளர்களுக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை இறக்குமதி செய்யப்பட்டுள்ள பால் மாவின் கையிருப்பு நிறைவடைய ஒரு மாத காலம் ஆகும் எனவும் அதன் பின்னர் விலை குறைப்பு மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.