பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது

Sri Lanka Police Palitha Range Bandara Sri Lanka Police Investigation
By Mayuri Jun 29, 2024 10:36 AM GMT

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கருவலகஸ்வெவ கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் செலுத்திய வாகனம் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் வீதியை விட்டு விலகி முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதி

இதன்போது காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது | Palitha Range Bandaras Son Arrested

விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW