இம்ரான் கானின் செயற்பாடுகள் அவரது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Pakistan
By Fathima Mar 27, 2023 09:59 PM GMT

இம்ரான் கானின் நடவடிக்கைகள் அவரது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இவரின் செயற்பாடு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம் எனவும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரானா சன உல்லா கூறியுள்ளார்.

இம்ரான் கானின் செயற்பாடுகள் அவரது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Pakistan War To Srilanka People

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-பும், அமைச்சர் ரானா சன உல்லா-வும், ஐ.எஸ்.ஐ. உளவுத்துறையின் உயரதிகாரி ஒருவருடன் சேர்ந்து தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தானில் சக்திவாய்ந்ததாக கருதப்படும் ஐ.எஸ்.ஐ. மீது இம்ரான் கான் நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளார்.