பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் தீ விபத்து - 7 பேர் உயிரிழப்பு
Pakistan
By Fathima
பாகிஸ்தானில், ஓடும் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கராச்சியிலிருந்து லாகூர் நோக்கி சென்ற ரயிலில் நள்ளிரவு திடீரென ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது ரயிலுக்குள் சிக்கிக்கொண்ட 6 பயணிகளும், ஜன்னல் வழியாக பாய்ந்த பெண் பயணி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.