பாகிஸ்தான் - இலங்கை நட்புறவு கிண்ணம் கொழும்பில் ஆரம்பம்

Colombo Sri Lanka Sri Lankan Peoples Pakistan Sports
By Rakshana MA Jan 12, 2025 11:40 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பினால் 2014ஆம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ச்சியாக 10ஆவது வருடமாகவும் நடைபெற உள்ள 40 வயதுக்கு மேற்பட்டவர்களின் மூத்த உதைப்பந்தாட்டப் போட்டியானது 10ஆவது ஆண்டை முன்னிட்டு பாகிஸ்தான் - இலங்கை நட்புறவு கிண்ணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் 24 முன்னணி அணிகள் பங்குபற்ற உள்ளதோடு, இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் வீரர்களும் அந்த விளையாட்டுக் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றியுள்ளனர்.

மேலும், கொழும்பு 13, கொட்டாஞ்சேனை ரத்தினம் மைதானத்தில் தொடரவுள்ள இந்தப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று(12) காலை இடம்பெற்றுள்ளது.

2025இல் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்களின் பட்டியல் : இலங்கையின் நிலை

2025இல் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்களின் பட்டியல் : இலங்கையின் நிலை

இரு நாடுகளுக்கான நட்புறவு

அத்துடன், பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான நட்புறவை ஆதரிப்பதே இந்த போட்டியின் நோக்கம் என்றும், இந்த போட்டியை காண வருகை தரும் விளையாட்டு ரசிகர்களை ஒன்றிணைந்து தங்கள் ஆதரவை தெரிவிக்குமாறும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் - இலங்கை நட்புறவு கிண்ணம் கொழும்பில் ஆரம்பம் | Pakistan Sri Lanka Friendship Cup Kicks Off 2025

மேலும், இந்த ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சிரேஷ்ட பிரதி தலைவர் மௌலவி ஐ.எம்.எம். மிப்லால், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான பொருளாளர் ஐ.ஏ. கலீலுர்ரஹ்மான், தலைமைத்துவ சபை உறுப்பினர் எஸ்.எம்.முஸம்மில், கூட்டமைப்பின் பிரச்சார செயலாளர் எம்.பி.காதர் உட்பட கழகங்களின் பிரதானிகள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இறக்காமம் வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக விசேட கூட்டம்

இறக்காமம் வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக விசேட கூட்டம்

கிண்ணியாவில் வழங்கி வைக்கப்பட்டுள்ள இலவச மூக்குக்கண்ணாடிகள்

கிண்ணியாவில் வழங்கி வைக்கப்பட்டுள்ள இலவச மூக்குக்கண்ணாடிகள்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGallery