இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை அறிவித்தது பாகிஸ்தான்!

Sri Lanka Pakistan
By Fathima Apr 11, 2023 09:37 PM GMT

பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணைக்குழு, இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை அறிவித்துள்ளது.

இதன்படி, அல்லாமா முஹம்மது இக்பால் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் முழுமையாகவும் பகுதியளவும் நிதியளிக்கப்பட்ட புலமைப்பரிசில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  

அல்லாமா முஹம்மது இக்பால் புலமைப்பரிசில்

இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை அறிவித்தது பாகிஸ்தான்! | Pakistan Scholarship Program For Srilankan Student

மேற்கூறிய திட்டத்தின் கீழ், BS.MS மற்றும் PhD நிலைகளில் அனைத்து துறைகளுக்கும் உதவித்தொகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆர்வமுள்ளவர்கள் 25 ஏப்ரல் 2023க்குள் HEC இணையதளம் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளார்கள்.