பாகிஸ்தானில் தமிழர்கள் கொண்டாடிய பங்குனி உத்திரத் திருவிழா
Pakistan
Hinduism
By Fathima
Courtesy: பிபிசி தமிழ்
பாகிஸ்தானின் கராச்சியில் வாழும் இந்துக்கள் ஒன்றுகூடி பங்குனி உத்திரத் திருவிழாவைக் கொண்டாடியுள்ளனர்.
பாகிஸ்தானின் கராச்சியில் வாழும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுக்குள் நிதி சேகரித்து, இந்த பண்டிகைக்காக பாரம்பரிய உணவுகளை தயார் செய்கின்றனர்.
இந்துக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களில் பெரும்பாலானோர் இந்த நாளுக்காக, சில வாரங்கள் விரதம் இருப்பதும் வழக்கம்.
பாகிஸ்தானில் பங்குனி உத்திரம் நடைபெறுவது புதிதாகத் தொடங்கிய சடங்கல்ல. சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடரும் பாரம்பரியம் என்கிறார்கள்.
விழாவின் ஒரு பகுதியாக, பக்தர்கள் பலர் காவடி எடுத்தும், அலகு குத்திக்கொண்டும் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தியுள்ளனர்.