தேர்தல் நடத்தப்படாவிட்டால் வன்முறை போராட்டங்கள் வெடிக்கும்! இம்ரான் கான் எச்சரிக்கை

Sri Lanka Pakistan
By Fathima Apr 30, 2023 09:51 PM GMT
Fathima

Fathima

தேர்தல் நடத்தப்படாவிட்டால் நாட்டில் வன்முறைப் போராட்டங்கள் வெடிக்கும் என்று பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது பாகிஸ்தான், இலங்கை போன்ற ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் நடத்தப்படாவிட்டால் வன்முறை போராட்டங்கள் வெடிக்கும்! இம்ரான் கான் எச்சரிக்கை | Pakistan Election Imran Khan Warrning

பேரணிகள் 

இது ஒரு எச்சரிக்கை அல்ல, தமது பகுப்பாய்வு என்று குறிப்பிட்டுள்ள அவர், விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் இதுவரை கட்சி பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் அமைதியாக செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டால், அவர்கள் வீதிக்கு வருவார்கள், நிலைமையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Joint Now