முடக்கப்பட்ட பாகிஸ்தானுக்கான இராணுவ நிதியுதவியை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை

United States of America Pakistan
By Fathima Apr 30, 2023 06:53 PM GMT
Fathima

Fathima

கடன் நெருக்கடி காரணமாக முடக்கப்பட்ட பாகிஸ்தானுக்கான இராணுவ நிதியுதவியை திரும்ப அளிக்கும்படி, அமெரிக்காவிடம் பாகிஸ்தான் தூதர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த கருத்தரங்கில், அமெரிக்காவுக்கான பாகிஸ்தான், தூதர் மசூத் கான் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

முடக்கப்பட்ட பாகிஸ்தானுக்கான இராணுவ நிதியுதவியை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை | Pakistan Economic Crisis Military Funding

நாடு பெரும் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கான இராணுவ நிதியுதவியை திரும்ப வழங்குமாறு கோரியுள்ளார்.

டொனால்டு டிரம்ப் பதவிக் காலத்தில் பாகிஸ்தானுக்கான இராணுவ நிதி உதவி மற்றும் ஆயுதங்கள் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த உத்தரவை திரும்பப் பெறுமாறும், மீண்டும் பாகிஸ்தானுக்கான இராணுவ நிதி உதவியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.   

முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Joint Now