பாகிஸ்தானில் தொடரும் நெருக்கடி! இலவச பொருட்களுக்காக நெரிசலில் சிக்கி 11 பேர் பலி

Pakistan World Economic Crisis
By Fathima Mar 31, 2023 06:50 PM GMT

பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக கடும் உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மக்களுக்கு தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் கிடைக்கப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் கராச்சி மாகாணம் சிந்து தொழிற்பேட்டை பகுதியில் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தொடரும் நெருக்கடி! இலவச பொருட்களுக்காக நெரிசலில் சிக்கி 11 பேர் பலி | Pakistan Economic Crisis

வழக்குப்பதிவு 

இதன் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட பலர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகளை கைது செய்துள்ளனர்.