பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 13 பேர் உயிரிழப்பு
Accor
Pakistan
By Fathima
பாகிஸ்தானில் நெடுஞ்சாலையில் பேருந்தொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
லாகூரில் இருந்து ராவல்பிண்டி நோக்கி 34 பயணிகளுடன் பேருந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

விபத்திற்கான காரணம்
இந்த விபத்தில் ஐந்து பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
விபத்து தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட முதல்கட்ட தகவலின்படி பிரேக் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.