சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கவுள்ள பாகிஸ்தான்
Pakistan
Social Media
By Harrish
முகரம் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தானில் 6 நாட்களுக்கு சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான 6 நாட்களுக்குப் பஞ்சாப் மாகாணத்தில் இந்த தடையை விதிக்க வேண்டும் என அந்த மாகாண முதல்வர் மரியம் நவாஸ் ஷெரீப் (Maryam Nawaz Sharif) பரிந்துரைத்துள்ளார்.
பஞ்சாப் அரசாணை
பிரச்சினைகள் மற்றும் வன்முறை போன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகப் பஞ்சாப் அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அத்துடன், பஞ்சாப் மாகாணத்தில் சுமார் 12 கோடி மக்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் |