இந்திய வான்பரப்புக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானம்
பாகிஸ்தானைச் சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று கனமழை காரணமாக தவறுதலாக இந்திய வான்பரப்புக்குள் நுழைந்த நிலையில், அதிகாரிகளின் அனுமதி பெற்று மாற்றுப்பாதையில் பத்திரமாக பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது.
இந்த பாகிஸ்தான் விமானம் சுமார் பத்து நிமிடங்கள் இந்திய வான்பரப்பில் இருந்துள்ளதுடன் விமானம் இந்தியாவுக்குள் நுழைந்தவுடன் இராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
லாகூரில் தரையிறங்க வேண்டிய பாகிஸ்தானைச் சேர்ந்த பயணிகள் விமானம் கனமழை காரணமாக தவறுதலாக இந்திய வான்பரப்புக்குள் நுழைந்த நிலையில், அதிகாரிகளின் அனுமதி பெற்று மாற்றுப்பாதையில் பத்திரமாக பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது.
மோசமான வானிலையால் விமானி பாதையைத் தவறவிட்ட நிலையில், விமானம் இந்திய வான்பரப்புக்குள் நுழைந்துள்ளதாக இந்திய விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி விளக்கமளித்த நிலையில் வான்பரப்பை பயன்படுத்திக்கொள்ள இந்திய அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர்.
முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Joint Now |