மலேசிய விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமானம் சிறைபிடிப்பு

Pakistan Malaysia
By Fathima May 30, 2023 07:00 PM GMT
Fathima

Fathima

மலேசிய விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமானம் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, பாகிஸ்தான் விமான நிறுவனமான பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் குத்தகை முறையில் மலேசியாவிடமிருந்து போயிங் 777 வாங்கியுள்ளது.

இதற்கு தவணை முறையில் பணம் மலேசியாவுக்கு கொடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தவணை தொகை செலுத்தப்படமால் இருந்துள்ளது.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இதன்படி மொத்தம் 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படவில்லையெனவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பாக மலேசிய நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் விமானத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மலேசியா வந்த பாகிஸ்தான் விமானம் விமான நிலையத்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.