சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேர்தல் சட்டங்களை அலட்சியம் செய்வதாக முறைப்பாடு

Election Commission of Sri Lanka Election
By Mayuri Sep 13, 2024 06:31 AM GMT
Mayuri

Mayuri

பொலிஸ் தலைமையகத்தை சேர்ந்த சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேர்தல் சட்டங்களை புறக்கணிக்கின்றனர் என பவ்ரல் முறைப்பாடு செய்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பிற்கு முன்னதாக நாட்டில் பொலிஸ் மா அதிபரோ அல்லது பதில் பொலிஸ் மா அதிபரோ இல்லாத போதிலும் பொலிஸார் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்றுள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அதேவேளை சில அதிகாரிகள் தேர்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்த தவறுவது குறித்து கரிசனை வெளியிட்டுள்ளது.

தேர்தலின் சட்டமொழுங்கு

வவுனியாவின் பொலிஸ் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேர்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்த தவறுகின்றனர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவருக்கு தெரிவித்துள்ளார்.

சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேர்தல் சட்டங்களை அலட்சியம் செய்வதாக முறைப்பாடு | Pafrel Election In Sri Lanka

2024 ஜனாதிபதி தேர்தலின் போது சட்டமொழுங்கை பேணுகின்றமைக்காக நாங்கள் பொலிஸாரை பாராட்டுகின்றோம், பொலிஸ்மா அதிபரோ பதில் பொலிஸ்மா அதிபரோ இல்லாமல் அவர்கள் செயற்படுகின்றனர், தேர்தலிற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ்மா அதிபரின் செயற்பாடுகளை நாங்கள் அங்கீகரிக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவின் பொலிஸ் தலைமையகத்தின் தலைமை பொலிஸ் பரிசோதகர் சட்டவிரோத சுவரொட்டிகள் போன்றவற்றை அகற்றுவது குறித்து அக்கறை காட்டவில்லை  தேர்தல் அதிகாரிகளின் உத்தரவுகளை அலட்சியம் செய்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW