கண்ணிவெடி அகற்றும் பணிகள் விரைவில் நிறைவடையும்: பி.எஸ்.எம். சார்ள்ஸ் உறுதி

Kilinochchi Sri Lanka P. S. M. Charles
By Harrish Apr 07, 2024 12:09 AM GMT
Harrish

Harrish

இந்த வருட இறுதிக்குள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடையும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வுக்கான சர்வதேச தினத்தையொட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று (06.04.2024) விசேட நிகழ்வும், கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தமிழர் பாரம்பரியத்தை உலகறியச் செய்யும் அடுத்த நகர்வு

தமிழர் பாரம்பரியத்தை உலகறியச் செய்யும் அடுத்த நகர்வு

கண்ணிவெடி அற்ற நாடு

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போது, 2030 ஆம் ஆண்டுக்கு பின்னரே இலங்கையை கண்ணிவெடி அற்ற நாடாக பிரகடனப்படுத்த முடியும் என்ற ஒரு நிலைப்பாடு எழுந்தது.

எனினும் இந்த வருட இறுதிக்குள் பெரும்பாலான வகையில் கண்ணிவெடி அகற்றப்பட்டு மக்கள் தங்களுடைய குடியிருப்புகளுக்குள் செல்லக்கூடிய நிலை ஏற்படும் என எதிர்பார்க்கபடுகின்றது.

கண்ணிவெடி அகற்றும் பணிகள் விரைவில் நிறைவடையும்: பி.எஸ்.எம். சார்ள்ஸ் உறுதி | P S M Charles Speech At Kilinochchi

இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் சர்வதேச அமைப்புகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன் மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளுக்கு கண்ணிவெடி அகற்றப்படாமை பாரிய சவாலாக காணப்படுகின்றது.

பூநகரி மற்றும் முகமாலை பகுதிகளில் அதிகளவு கண்ணிவெடி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

கண்ணிவெடி அகற்றும் பணிகள் விரைவில் நிறைவடையும்: பி.எஸ்.எம். சார்ள்ஸ் உறுதி | P S M Charles Speech At Kilinochchi

இந்த செயற்பாடுகளில் பணியாற்றிக் கொண்டிருப்போர், தங்களின் உயிர்களை பணயம் வைத்து ஆற்றிவரும் சேவைக்கு மிக்க நன்றி. அத்துடன் மீள்குடியேற்ற செயற்பாடுகளை நிறைவு செய்ய கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

இதேவேளை, நிலக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் பெண்களை ஈடுப்படுத்திய நாடு என்ற பெருமையை இலங்கை கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

கண்ணிவெடி அகற்றும் பணிகள் விரைவில் நிறைவடையும்: பி.எஸ்.எம். சார்ள்ஸ் உறுதி | P S M Charles Speech At Kilinochchi

மேலும் இலங்கையில் பெண்கள் முதன் முதலாக கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை வவுனியாவில் ஆரம்பித்தமையை நினைவுப்படுத்திய ஆளுநர், இந்த செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு தனது விசேட நன்றிகளையும், பாராட்டுதல்களையும் கூறியுள்ளார்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கலந்து சிறப்பித்துள்ளனர்.

கனடாவில் அனுரவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய தமிழ் இளைஞனின் நடவடிக்கை

கனடாவில் அனுரவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய தமிழ் இளைஞனின் நடவடிக்கை

முல்லைத்தீவில் இடம்பெற்ற புதுவை பண்பாட்டு பெரு விழா

முல்லைத்தீவில் இடம்பெற்ற புதுவை பண்பாட்டு பெரு விழா

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery