மட்டக்களப்பில் மலசலகூடத்தில் உணவு தயாரித்த உரிமையாளர் கைது

Batticaloa Sri Lankan Peoples Healthy Food Recipes Public Health Inspector
By Rakshana MA Mar 25, 2025 11:15 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு(Batticaloa) செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளால் குறித்த பிரதேசத்திலுள்ள உணவகங்கள் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை!

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை!

நீதிமன்ற உத்தரவு

குறித்த சோதனை நடவடிக்கையின் போது, ஒரு உணவகத்தில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்துவந்தது தெரியவந்துள்ளதையடுத்து, அந்த உணவக உரிமையாளரை கைது செய்துள்ளனர்.


இதனையடுத்து உணவக உரிமையாளரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதை தொடர்ந்து அவரை ஒரு மாதகாலம் சிறையில் அடைக்குமாறும் 60 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேவேளை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அருகில் வீதி ஓரத்தில் கொல்கலனில் அமைக்கப்பட்டுள்ள இரு உணவகத்தில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்த இரு கடைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 20 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்மாந்துறையில் பாவனைக்கு உதவாத குளிர்பானங்கள் மீட்பு : எடுக்கப்பட்ட நடவடிக்கை

சம்மாந்துறையில் பாவனைக்கு உதவாத குளிர்பானங்கள் மீட்பு : எடுக்கப்பட்ட நடவடிக்கை

நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ள மூலிகை வளர்ப்பு திட்டம்

நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ள மூலிகை வளர்ப்பு திட்டம்

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW