யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அபிவிருத்திக் முன்வைத்த தீர்மானம்

Jaffna Sri Lanka Jaffna Teaching Hospital
By Madheeha_Naz Mar 30, 2024 09:49 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மாலை ஆறு மணி வரை செயற்படும் என வைத்திய சாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நேற்று (30.03.2024) மாலை இடம்பெற்ற வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு தீர்மானங்களை அறிவித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

வெளிநோயாளர் பிரிவு

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வெளிநோயாளர் பிரிவில் அதிகளவில் சிகிச்சை பெறுவதற்கு வருகிறார்கள்.

அதன் காரணமாக வெளி நோயாளர் பிரிவை போயா தவிர்ந்த கிழமை நாட்களில் மாலை 6 மணி வரை செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

வைத்தியசாலையின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு இட வசதி மற்றும் ஆளணி எமக்குள்ள ஒரு பாரிய சவாலாக விளங்குகிறது.

எனினும் எம்மிடம் காணப்படுகின்ற வளங்களை உரிய முறையில் பயன்படுத்தி சேவையாற்றி வருகிறோம்.

எமது தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் எடுத்துரைத்துள்ளோம். அவர் எமது தேவைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது" என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்திற்கு யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு தலைவர் வாழ்நாள் பேராசிரியர் பொன் பாலசுந்தரம் பிள்ளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனாநந்தா வைத்தியசாலை கணக்காளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Gallery