அரசாங்கத்தின் பிழைகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சிகளின் கடமை! எஸ்.எம் மரிக்கார்

SJB Saidulla Marikkar
By Fathima Dec 09, 2025 01:09 PM GMT
Fathima

Fathima

அரசாங்கத்தின் பிழைகளை சுட்டிக் காட்டுவது எதிர்க்கட்சிகளின் தலையாய கடமை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சிறந்தது, அப்படியே செய்யட்டும், அவர்கள் சிறந்த முறையில் செய்கிறார்கள் என அவர்களுக்கு கொடிபிடிப்பது எதிர்க்கட்சியின் கடமை அல்ல என தெரிவித்துள்ளார்.

நெருக்கடியான தருணம்

அரசாங்கத்திற்கு நெருக்கடியான தருணங்களில் உதவுவதைப் போன்று அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் முட்டாள்தனமான செயல்பாடுகளை விமர்சனம் செய்வதும் எமது கடமையாகும் என தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பிழைகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சிகளின் கடமை! எஸ்.எம் மரிக்கார் | Our Prime Duty Is Crtizise Govt

அரசாங்கம் செய்யும் அனைத்து செயல்பாடுகளையும் புகழ்ந்து பாராட்டிக் கொண்டு இருப்பது நல்லதொரு எதிர்க்கட்சியின் பொறுப்பு அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விமர்சனங்களை எதிர்கொள்ள தயார் இல்லை என்றால் அவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது எனவும் தமக்கு தனிப்பட்ட ரீதியில் பல்வேறு விமர்சனங்கள் செய்யப்படுவதாகவும் ஆனால் அவற்றை தாம் பொருட்படுத்துவதில்லை எனவும் மரிக்கார் தெரிவித்துள்ளார்.

அரசியல் என்பது பொறுமையின் விளையாட்டு என முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்க கூறியுள்ளார் எனவும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.

அரசாங்கம் செய்வது அனைத்தையும் ஆமோதித்து அவர்களை பாராட்டுவது மட்டுமே எதிர்கட்சிகளின் பொறுப்பு என அரசாங்கம் கருதுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.