ஓட்டமாவடி வாவிக்கரை பூங்கா செயற்திட்ட பணிகள் ஆரம்பம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பன்முகப்படுத்தப்பட்ட மாவட்ட நிதியிலிருந்து 3 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பு - ஓட்டமாவடி பாலத்துக்க்ருகாமையில் வாவிக்கரை பூங்காவினை அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வானது இடம்பெற்றுள்ளது.
உல்லாச பிரயாணிகளைக்கவரும் வகையிலும் உள்ளூர் மக்களின் ஓய்வுக்காகவும், உள்ளூர் உணவு உற்பத்திகளை சந்தைப்படுத்துவதனையும் நோக்காகக்கொண்டு குறித்த செயற்திட்டம் நடைமுறைப்படத்தப்படவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வானது தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவருமான கந்தசாமி பிரபுவினால் நேற்று 31.07.2025ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் செயலாளர் ஏ.தாஹிர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனரின் ஒருங்கிணைப்புச்செயலாளர் யூ.கே.எம்.அப்துல்லாஹ், ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ், பிரதே சபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் கல்குடா கோறளைப்பபற்று மேற்கு, மத்தி அரசியல் செயற்பாட்டுக்குழு உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.



