ரஷ்ய அதிபரால் வெளியிடப்பட்ட அறிவிப்பு! களமிறங்கும் புதிய ஹைபர்சோனிக் ஏவுகணை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin), ரஷ்யாவின் புதிய ஹைபர்சோனிக் ஏவுகணை 'ஒரெஷ்னிக்' (Oreshnik) உற்பத்தி முடிந்துள்ளதாகவும், அது தற்போது இராணுவ சேவையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
இந்த ஏவுகணை ரஷ்யாவின் நட்பு நாடான பெலரஸில் (Belarus) இந்த ஆண்டின் இறுதிக்குள் நிலைநிறுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள வாலாம் தீவில் பெலரஸ் ஜனாதிபதி லுகாசென்கோவுடன் இணைந்து பேசிய புடின், ஏவுகணை பதுக்கப்படும் இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என்றும், செயற்பாட்டு பணிகள் வேகமாக நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
திய ஹைபர்சோனிக் ஏவுகணை
ஒரெஷ்னிக் ஏவுகணை, கடந்த ஆண்டு உக்ரைனில் ஒரு தொழிற்சாலையைத் தாக்கி சோதனை செய்யப்பட்டது. இது Mach 10 வேகத்தில் பாயும் திறனைக் கொண்டது.
ஒரே நேரத்தில் பல ஒரெஷ்னிக் ஏவுகணைகளை பயன்படுத்தினால், அது ஒரு அணு தாக்குதலுக்கு இணையான அழிவை ஏற்படுத்தும் என புடின் தெரிவித்துள்ளார்.
இந்த ஏவுகணை வழக்கமான அல்லது அணு ஆயுதங்களையும் ஏந்திச் செல்லக்கூடிய திறனுடையது. 5,500 கிமீ வரை பாயக்கூடியது என்பதால், இது முழு ஐரோப்பாவையும் தாக்கும் திறனைக் கொண்டது.
அணு ஆயுத கொள்கை
இது 2019-இல் கைவிடப்பட்ட அமெரிக்கா - ரஷ்யா இடையிலான இடைநிலை ஏவுகணை ஒப்பந்தத்திற்குப் பின்பு வந்த முக்கிய மாற்றமாகும்.
ரஷ்யாவின் புதுப்பித்த அணு ஆயுத கொள்கை பெலாரஸை பாதுகாப்புத் தரப்பில் சேர்த்துள்ளது.
பெலரஸ் தற்போது தாக்குதலுக்கேற்ப அணு ஆயுதங்களை பயன்படுத்த முடியும் என்ற நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |