சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

By Fathima May 07, 2024 02:56 AM GMT

பலாங்கொடை, மாரத்தென்ன தெதனகல தமிழ் வித்தியாலய மாணவன் ஒருவர் நேற்று திங்கட்கிழமை(06) உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் ஹரினாத் என்ற 17 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

குறித்த மாணவன், பரீட்சைக்குத் தோற்றுவதற்கு முன்னர் பிரதேசத்தில் அமைந்துள்ள காளி கோவில் ஒன்றுக்கு சென்றபோது அங்கு திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இந்நிலையில் பிரதேசவாசிகள் இணைந்து மாரத்தென்ன வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.