நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு
Colombo
Supreme Court of Sri Lanka
Dr.Archuna Chavakachcheri
By Fathima
வழக்கு விசாரணை ஒன்றுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறிய, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து முன்னிலைபடுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (23) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர், விசாரணைக்காக இன்று முன்னிலையாக தவறியமை காரணமாகவே கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே இன்று (23) உத்தரவிட்டடுள்ளார்.