எதிர்க்கட்சி தாக்கல் செய்துள்ள மனு! முஜிபுர் ரஹ்மான் தகவல்

Samagi Jana Balawegaya Mujibur Rahman NPP Government Cyclone Ditwah Disaster Management Centre
By Chandramathi Dec 12, 2025 03:11 PM GMT
Chandramathi

Chandramathi

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் நவம்பர் 17 தொடக்கம் 27 ஆம் திகதி வரை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு விஜயம் செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, கோரிக்கை மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

மனு தாக்கல்

இதனை தொடர்ந்து, ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தனர்.  

எதிர்க்கட்சி தாக்கல் செய்துள்ள மனு! முஜிபுர் ரஹ்மான் தகவல் | Opposition Party Sri Lanka Right Information Act

தொடர்ந்து பேசிய முஜிபுர் ரஹ்மான் எம்.பி, பேரிடர் தொடர்பில் நவம்பர் 17 தொடக்கும் 27 ஆம் திகதி வரை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் பல அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள்,அரச நிறுவனங்கள் ஒன்றிணைந்து பல பேச்சுவார்த்தைகள் மற்றும் சூம் கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

அதில் அதிகாரிகள் மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள்,வெளியிடப்பட்ட அறிக்கைகள்,அவசர நடவடிக்கை தொடர்பிலான சகல அறிக்கைகளையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோட்டுள்ளோம்.

இந்த தகவல்கள் நாட்டு மக்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் உள்ளவர்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டியதாகும் என தெரிவித்தார்.