கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு! அவசரமாக திறக்கப்பட்ட வான்கதவுகள்

Sri Lanka Sri Lankan Peoples Climate Change Weather Rain
By Fathima Nov 28, 2025 10:01 AM GMT
Fathima

Fathima

கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பத்து வான்கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு அடிக்கு மூன்று வான் கதவுகளும், மூன்று அடிக்கு ஆறு வான் கதவுகளும், தலா இரண்டு அடிக்கு இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் கந்தளாய் குளத்திலிருந்து அதிகப்படியான நீர் வெளிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளத்தின் நீர்மட்டம்

கந்தளாய் குளத்தின் தற்போதைய மொத்த நீரின் கொள்ளளவு 114,000 ஏக்கர் அடியாகும்.

கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு! அவசரமாக திறக்கப்பட்ட வான்கதவுகள் | Opening Ten Floodgates Of The Kanthalai Pond

கிழக்கு மாகாணத்தில், தற்போது பெய்து வருகிற கனமழை காரணமாக கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து கொண்டிருப்பதனால், இன்று (28) குளத்தின் பத்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

கந்தளாய் குளத்தில் 1113, 222 கன அடி நீர் உள்ளதால், மேலதிகமான நீரை வெளியேற்றுவதற்காக, தற்போதுள்ள குளத்தின் நீர்மட்டத்தை குறைப்பதற்காகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.