வெள்ளம் காரணமாக மாத்தறை மற்றும்
By Fathima
வெள்ளம் காரணமாக மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் மூடப்பட்டுள்ள பாடசாலைகள் தவிர்ந்த, ஏனைய பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில், தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய தகவலிளேயே இதனை தெரிவித்துள்ளார்.
நிலவிய சீரற்ற வானிலை காரணமாக கடந்த வியாழக்கிழமை முதல் இன்று வரையில் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.