கிழக்கில் கழிவுகள் அற்ற ஆரோக்கிய நகரம் குறித்த கலந்துரையாடல்
சாய்ந்தமருதில்(Sainthamaruthu) 'கழிவுகள் அற்ற ஆரோக்கிய நகரம் - திண்மக் கழிவு முகாமைத்துவ அணுகுமுறை' என்பதற்கு இணங்க செயலமர்வு மற்றும் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்ச்சியானது நேற்று(14) சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பொறியியலாளர் கமால் நிஷாத் ஒருங்கிணைப்பில் சமூக அபிவிருத்திக்கான அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
மேலும், இதன்போது கொழும்பு மாநகர சபை கழிவு முகாமைத்துவம் செய்வதில் கடந்த காலங்களில் எதிர்நோக்கிய சவால்கள் மற்றும் அவை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட விதம் குறித்த விளக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆரோக்கிய நகரம்
அத்துடன், இந்த கலந்துரையாடலானது கல்முனை மற்றும் அதனை அண்மித்த உள்ள உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதில் எதிர்நோக்கும் சவால்கள், அவற்றுக்கான சாதகமான தீர்வுகள், மற்றும் இங்குள்ள நிறுவனங்கள் பின்பற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்த கேள்வி பதிலுடன் கூடியதாக அமைந்திருந்தது.
இந்த நிலையில் குறித்த கலந்துரையாடலில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டதுடன், கல்முனை ஆதார வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






