இணையதளம் மூலம் ஆசன முன்பதிவு வெற்றி
By Fathima
இணையதளம் மூலம் ஆசன முன்பதிவு செய்யும் சேவை மிகவும் வெற்றியடைந்துள்ளதாகவும் மாதாந்தம் எழுபத்தி ஏழாயிரம் பேர் சேவையைப் பெறுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
இச்சேவை மூலம் ஒரு வருடத்தில் மூன்றரை கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசன முன்பதிவு
எதிர்வரும் மார்ச் மாதம் நாடளாவிய ரீதியில் 5,300 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதுடன், புதிதாக 800 நடத்துனர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்துள்ளார்.
