புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பம் தொடர்பில் வெளியான தகவல்
Department of Examinations Sri Lanka
Grade 05 Scholarship examination
Sri Lankan Schools
Education
By Thulsi
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் பணி இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று (06.07.2023) நள்ளிரவு 12.00 மணிக்கு பின்னர் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சை
புலமைப்பரிசில் பரீட்சைக்கான இணையம் முலமாக விண்ணப்பிக்கும் நடைமுறை ஜூன் 15 ஆம் திகதி ஆரம்பமானது.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.