அதிகளவில் இறக்குமதி செய்யப்படவுள்ள வெங்காயம்
இலங்கையில் 20,000 மெற்றிக்தொன் வெங்காயத்தை முதற்கட்டமாக இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை அரச வர்த்தக கூட்டத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அந்தக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவீந்ர பெர்ணான்டோ(Raveendra Fernando) இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த இறக்குமதியானது ஏற்கனவே வெங்காயம் இறக்குமதி செய்வது தொடர்பில் எடுக்கப்பட்ட தீமைானத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான விலைமனு கோரல் நாளையுடன் நிறைவடைகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
வெங்காயம் இறக்குமதி
எனினும் தற்போது, சந்தையில் வெங்காயத்துக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ள காரணத்தால் இந்த மாதம் 31ஆம் திகதிக்குள் 30 ஆயிரம் மெற்றிக்தொன்வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்தது.
இதேவேளை, கடந்த சில நாட்களாக சந்தையில் வீழ்ச்சியடைந்திருந்த முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |