சாய்ந்தமருது சுகாதார வைத்திய வருடாந்த ஒன்று கூடலும் கௌரவிப்பும்
சாய்ந்தமருது(Sainthamaruthu) சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வருடாந்த ஒன்று கூடலும், கௌரவிப்பும் வைத்தியர் ஜே.மதனின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
மேற்படி, நிகழ்வானது நேற்று(31) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
பாராட்டு நிகழ்வு
மேலும், இதன் போது பிரதேச சுகாதார மேம்பாட்டுக்காக உழைத்த உத்தியோகத்தர்கள் பாராட்டி கௌரவித்து நினைவுச் சின்னங்கள், பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், இதன்போது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கான புதிய பெயர் பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கான கர்ப்ப பதிவு ஆவணம் (Pregnancy Record File) வழங்கப்பட்டது.
அத்துடன் இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சி.எம்.மாஹிர், தாய் சேய் நல பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.றிஸ்வின் மற்றும் தொற்றா நோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் இர்ஷாத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |