பெரிய வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை
அநுராதபுரம் (Anuradhapura) - கலென்பிந்துனுவெவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விவசாயிகள் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வருட யலாப் பருவத்துக்கான பெரிய வெங்காய பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும், அவற்றின் அறுவடைக்கு உரிய விலை கிடைக்க வில்லை என விவசாயிகள் கவலை வெளியிட்டள்ளனர்.
இதனடிப்படையில், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 120 முதல் 150 ரூபா வரையுள்ளது.
பெரிய வெங்காயம்
இதனால், உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை குறையும் அபாயம் உள்ளதாகவும் இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் பெரிய வெங்காய விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் பயிரிட்டுள்ள பெரிய வெங்காயங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் தமக்கு இலாபம் இல்லை எனவும் இதனால் பயிர்ச்செய்கைக்காக பெற்ற கடனை கூட செலுத்த முடியாதுள்ளதாகவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு பெரிய வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் அரசாங்கத்தின் பொறுப்பான தரப்பினரிடம் பெரிய வெங்காயம் கிலோ 275 முதல் 300 ரூபாய் வரையிலான விலையில் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |