ருஹுனு பல்கலைக்கழகத்தில் தொடரும் பணிப்புறக்கணிப்பு

University of Ruhuna Sri Lanka Sri Lankan Peoples
By Rakshana MA Nov 20, 2024 05:56 AM GMT
Rakshana MA

Rakshana MA

ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை பதவி நீக்கம் செய்யுமாறு கோரி பல்கலைக்கழக கல்வி, கல்விசாரா மற்றும் மாணவர் சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (20) இரண்டாவது நாளாகவும் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த பிரச்சினை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் நேற்று பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த இதனைத் தெரிவித்தார்.

புதிய அமைச்சரவையின் நாடாளுமன்ற சபாநாயகராக நிஹால் கலப்பத்தி

புதிய அமைச்சரவையின் நாடாளுமன்ற சபாநாயகராக நிஹால் கலப்பத்தி

பதவி நீக்கம்

“பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவியேற்ற பிறகு கல்வித்துறை ஊழியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்களை கடும் அழுத்தத்திற்கு உள்ளாக்கி தனிப்பட்ட பழிவாங்கலுக்கு உள்ளாக்கியுள்ளார். குறிப்பாக, பல மாணவர்களின் கல்வி ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது நிறுத்தப்பட்டுள்ளது”.

ruhuna university students staff stirke

தொடர்ந்தும் பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்கவினால் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதாவது, “நாங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்தவுடன், அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்த நிலையில், பிரதமர் இது குறித்து கலந்துரையாடினார். இக்கலந்துரையாடல் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

ஆனால் இந்த துணைவேந்தரை பணியில் இருந்து நீக்கும் வரை இந்த வேலை நிறுத்தம் நிறுத்தப்படாது” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படுவது கொடுப்பனவுகள் தான் சம்பளம் அல்ல!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படுவது கொடுப்பனவுகள் தான் சம்பளம் அல்ல!

அநுர மீதான மலையக மக்களின் நம்பிக்கை!

அநுர மீதான மலையக மக்களின் நம்பிக்கை!

          நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW