QR முறை: ஒரு அடையாள அட்டையின் மூலம் ஒரு வாகனத்தை மட்டுமே பதிவு செய்யலாம் - புதிய தகவல்
ஒரு அடையாள அட்டை எண்ணின் கீழ் QR முறை மூலம் ஒரே ஒரு வாகனத்தை மட்டுமே பதிவு செய்ய முடியும் என அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க, இந்த விடயத்தை ஊடகமொன்று கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "ஒரு அடையாள அட்டை மற்றும் தொலைபேசி எண்ணுக்கு ஒரே ஒரு வாகனத்தை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று நாங்கள் கொள்கை முடிவு எடுத்தோம்.
நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கை முடிவு
அந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டபோது, பலர் வாகனங்களை மாற்றினர். அவர்களால் வாகனங்களைப் பதிவு செய்யவும் முடியவில்லை.

இந்த சமயத்தில், ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதற்காக நாங்கள் QR முறையைக் கொண்டுவந்தோம். ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் இருந்தால், BRN எனப்படும் ஒரு தனிப் பிரிவு உள்ளது.
நாட்டில் நெருக்கடி நிலவும் இக்காலத்தில், ஒரு தனிநபர் இரண்டு அல்லது மூன்று வாகனங்களைப் பயன்படுத்த விரும்பமாட்டார் என்பதே எனது தனிப்பட்ட கருத்து என குறிப்பிட்டுள்ளார்.