கேகாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

Sri Lanka Police Crime Death
By Rakesh Jul 14, 2023 03:17 PM GMT
Rakesh

Rakesh

கேகாலை, கலபிட்டமட – துனமால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (14.07.2023) பகல் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

துனமால பகுதியில் கப் ரக வாகனமொன்றில் பயணித்து கொண்டிருந்த ஒருவர் மீதே துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேகாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி | One Shot Dead In Kegala

பொலிஸார் மேலதிக விசாரணை

சம்பவத்தில் உயிரிழந்த நபர், துனமால இறப்பர் தோட்டக் காவலாளியாகப் பணியாற்றியவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கலபிட்டமட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW