நீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை ஒருவர் உயிரிழப்பு
Galle
Sri Lanka Police Investigation
Death
Russia
By Madheeha_Naz
காலி - ஹிக்கடுவை நகருக்கு அருகில் அமைந்துள்ள கடற்கரையில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரஜை நேற்றையதினம் (07.06.2023) மாலை கடற்கரையில் நீராடியபோதே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நீரில் மூழ்கியவரை உயிர்காப்பு படையினர் மீட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணை

உயிரிழந்தவர் 29 வயதான ரஷ்ய பிரஜை ஒருவரே ஆவார்.
இந்த சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.