கத்திக்குத்து தாக்குதலில் கிராண்ட்பாஸில் ஒருவர் பலி!

Colombo Sri Lanka Police Investigation Death
By Independent Writer Feb 27, 2025 12:00 AM GMT
Independent Writer

Independent Writer

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் படுகாயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.