இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலி
குருநாகல், மாவத்தகம, பிலஸ்ஸ பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவத்தகம, பிலஸ்ஸ பகுதியைச் சேர்ந்த மலித் தனுஷ்க என்ற 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு மோதலில் உயிரிழந்துள்ளார்.
இரு தரப்பினருக்கும் இடையே தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இந்த மோதல் 15 நிமிடங்களுக்கு நீடித்ததாகவும், பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் வந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தகவல் வழங்கியுள்ளார்.
இந்த மோதலில் காயமடைந்த மற்றுமொருவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மோதலில் ஈடுபட்ட 7 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், மோதலின் பின்னரும் அப்பகுதி பொலிஸாரால் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன் விசேட அதிரடிப்படையினர் மற்றும் மாவத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.