வரி அடையாள இலக்கத்தை பெறுவோரின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு
இலங்கையில் TIN வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை பெறும் நோக்குடன் இதுவரை 10 இலட்சம் பேர் வரை தம்மை பதிவுசெய்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, 2022 நிதியாண்டில், 204,467 எண்ணிக்கையான தனிநபர் வரிக் கோப்புகள் மாத்திரமே பதிவுசெய்யப்பட்டு இருந்ததாக திணைக்களம் கூறியுள்ளது.
வரி செலுத்தும் நிறுவனங்கள்
எனினும், தற்போதைய தரவு ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பை எட்டியுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதன்படி கோப்புகளின் எண்ணிக்கை இப்போது ஒரு மில்லியனை நெருங்குகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை வரி செலுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வு இருப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 2022 இல் 73,444 வரி செலுத்தும் நிறுவனங்களின் கோப்புகளே இருந்ததாகவும், எனினும் கடந்த நவம்பர் 30 நிலவரப்படி மொத்தமாக 81,909 நிறுவனங்களின் வரிக்கோப்புகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.