நானுஓயாவில் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து: ஒருவர் பலி
மரக்குற்றிகளை ஏற்றிச் செல்வதற்காக நுவரெலியா, தலவாக்கலை, கிரிமிட்டி வீதி ஊடாக பயணித்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நானுஓயா - டெஸ்போர்ட் பகுதியில் வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் லொறி கவிழ்ந்தத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் விபத்தில் மேலும் மூவர் காயமடடைந்ததாகவும் கூறப்படுகிறது.
நானுஓயா டெஸ்போர்ட் தோட்டத்தைச் சேர்ந்த வடமலை மயில்வாகனம் (வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
விபத்தில் லொறியின் சாரதி மற்றும் சாரதி உதவியாளர் ஆகியோர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.