மட்டக்களப்பில் கோடாரியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Batticaloa Sri Lanka Police Investigation Crime
By Laksi Dec 13, 2024 09:45 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு- ஊத்துச்சேனை பகுதியில் கூரிய ஆயதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (12) இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் வடமுனை- ஊத்துச்சேனையைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான வேலு சிவசுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை: முன்னாள் எம்.பி பகிரங்கம்

மட்டக்களப்பு வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை: முன்னாள் எம்.பி பகிரங்கம்

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், உயிரிழந்த நபர் நேற்றையதினம் தனது மனைவியின் சகோதரருடன் மது அருந்தி விட்டு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

மட்டக்களப்பில் கோடாரியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை | One Killed By Attacked With Sharp Weapon In Batti

இந்தநிலையில்,சகோதரியின் கணவர் மீது கோடாரி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தடவியல் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தகுதி தராதரம் பாராது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: ஜனாதிபதி அறிவிப்பு

தகுதி தராதரம் பாராது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: ஜனாதிபதி அறிவிப்பு

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW