கிளிநொச்சியில் வாகன விபத்து ஒருவர் பலி 9 பேர் படுகாயம்

By Madheeha_Naz Jan 24, 2024 07:21 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

கிளிநொச்சி ஏ.09 வீதியின் ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒன்பது பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் ஆனையிறவு பகுதியில் இன்று (24-01-2024) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் வீதியில் சென்று கொண்டிருந்த எருமை மாடுகளுடன் மோதியதுடன் எதிரே வந்த கயஸ் வாகனத்திலும் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

போலீசார் விசாரணை

இந்த விபத்தின் போது கயஸ் வாகனத்தில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளதுடன் இரண்டு சிறுவர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சியில் வாகன விபத்து ஒருவர் பலி 9 பேர் படுகாயம் | One Death Nine Injured In Kilinochchi

இவர்களில் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் 9 வகையான எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதுடன் நான்கு மாடுகள் காயமடைந்துள்ளன சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்