மூதூரில் யானை தாக்கியதில் வயோதிபர் பலி
Sri Lanka Police
Trincomalee
Elephant
Accident
By Madheeha_Naz
திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் தோப்பூர் -பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த முருகுப்பிள்ளை ராசலிங்கம் (69 வயது) என தெரிய வந்துள்ளது.
யானை தாக்குதல்
வீட்டை அண்மித்த பகுதியில் தோட்ட பயிர் செய்கையில் ஈடுபட்டு வந்த போது குறித்த நபர் யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதுடன் விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.