கிளிநொச்சியிலிருந்து யாழ்.சென்ற முதியவர் திடீர் உயிரிழப்பு
Jaffna
Hospitals in Sri Lanka
Death
By Fathima
கிளிநொச்சியிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பேருந்தில் பயணம் செய்த முதியவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றையதினம் (23.07.2023) இடம்பெற்றுள்ளது.
கந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை நவரத்தினராசா (வயது 76) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்ட பின்னரே உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.