சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த முக்கிய அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை பெறுபேறுகள்
இந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்ட சாதாரண தரப் பரீட்சையில் மொத்தம் 478,182 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றினர். அவர்களில் 398,182 பேர் பாடலாலை மாணவர்கள் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டதும், விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுகளை பின்வரும் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் வழியாக பார்வையிடலாம்.
http://www.results.exams.gov.lk
இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறும் பரீட்சைகள் திணைக்களம் அண்மையில் அறிவித்திருந்தது.
அதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 26 முதல் ஜூலை 21, 2025 வரை நிகழ்நிலையில் (Online) கோரப்படும் என்றும் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |